search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீட்டு மோசடி"

    • போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு
    • அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.15 லட்சம் கேட்டார்

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.இதில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் புகார் மனுக்களை பெற்றார்.

    வேலப்பாடியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்வராஜ் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் ஆசிரியராகப் பணியாற்றி 2012-ம் ஆண்டு ஒய்வு பெற்றேன். எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என் மகனுக்கு மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருகிறேன் என அவராகவே தெரிவித்து என்னிடம் வந்து ரூ.15 லட்சம் கேட்டார். நானும் அந்த பணத்தை கடன் வாங்கி அளித்தேன்.

    தற்போது நான் கடன் தொல்லையாலும், அவர் வேலை வாங்கித் தராததாலும் குடும்பமே மன உளச்சலுக்கு ஆளானோம். அந்த நிலையில் நான் சம்மந்தப்பட்டவரிடம் சென்று பணம் கேட்டு அடிக்கடி செல்வதை, யார் மூலமாகவோ தெரிந்து கொண்ட மற்றொரு நபர் சம்பந்தப்பட்டவரிடமிருந்து ரூ.15 லட்சம் வாங்கித் தருகிறேன் என்று என்னிடம் கூறினார். அவ்வப்பொழுது என்னிடம் வந்து ரூ.5 லட்சம் பெற்றுச் சென்றார் அதன் பிறகு பணம் பெற்றுத் தரவில்லை, அதன் பிறகு உன் பணத்தை தரமுடியாது என்று கூறி தர மறுத்துவிட்டார். ரூ.20 லட்சம் பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    சீட்டு பணம்

    வள்ளிமலை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    மேல்பாடி, மதுரா சின்ன கீசக்குப்பம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நபர் ஒருவர் தலைமையில் 35 பேர் ஏஜென்ட் இல்லாமல் சீட்டு ஆரம்பிக்கப்பட்டது. மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் செய்து 25 சீட்டுகள் முடிந்து விட்டது. மீதமுள்ள 10 பேருக்கு ரூ.35 லட்சம் தரவேண்டியுள்ளது. சீட்டு முடிந்து ஒரு வருடம் ஆகிறது.

    இதனைக் கேட்டால் பணத்தை தர மறுக்கின்றனர்.எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இளம்பெண் புகார்

    கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த பெண் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் குடியாத்தம் நகரில் இயங்கி வரும் ஜவுளி கடையில் சில வருடங்களாக பணிபுரிந்து வருகிறேன்.அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபரை 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தேன்.

    அவருக்கும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு மற்றும் தீய படிக்கவழக்கங்கள் உள்ளதால் அவரிடம் பேசுவதில்லை. அதன்பின் 2 ஆண்டுகளாக என்னை தொடர்ந்து அடிக்கடி வழிமறித்து கேலி செய்தும் தொல்லை கொடுத்தும் வருகிறார்.

    உன் மகளுக்கு எப்படி திருமணம் செய்கிறாய் என பார்க்கிறேன். என்னை ஒன்றும் செய்ய முடியாது என என் பெற்றோரிடம் திட்டுகிறார். உரிய விசாரனை செய்து எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சீட்டு பணத்தை கொடுக்காமல் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இழுத்தடித்து வந்த முருகனும், நிர்மலாவும் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.
    • மத்திய குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    சென்னை:

    ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் எம்.ஜி.ரோடு பகுதியில் வசித்து வருபவர் முருகையன்.

    இவர் அந்த பகுதியில் வசித்து வந்த முருகன்- நிர்மலா தம்பதியிடம் சீட்டு போட்டிருந்தார். பட்டாபிராம் காமராஜர் தெருவில் 20 ஆண்டுகளாக வசித்து வந்த இருவரிடமும் அப்பகுதியை சேர்ந்த மக்களும் சீட்டு கட்டி வந்தனர்.

    முருகையன் தனது பெயரிலும் மகன் பெயரிலும் இரண்டு 5 லட்சம் சீட்டை கட்டி வந்தார். சீட்டு முடிந்த பிறகும் சீட்டு பணத்தை கொடுக்காமல் கடந்த 2015-ம் ஆண்டு முதல் இழுத்தடித்து வந்த முருகனும், நிர்மலாவும் பின்னர் தப்பி ஓடி தலைமறைவானார்கள். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு நிலுவையில் இருந்து வந்தது.

    இந்நிலையில் சீட்டு மோசடி தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மத்திய குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலன் தலைமையிலான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவரும் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற பேலீசார் பெங்களூர் பீமா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முருகன்- நிர்மலா தம்பதியை கைது செய்தனர். இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    ×