செய்திகள்

சத்தீஸ்கரில் 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம்

Published On 2018-03-18 15:10 GMT   |   Update On 2018-03-18 15:10 GMT
சத்தீஸ்கரில் முதல் மந்திரி ரமன் சிங் முன்னிலையில் இன்று 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. #Massmarriage #Chhattisgarh #1100couples
ராய்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் மந்திரி ரமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசின் சார்பில் ‘முதல் மந்திரி கன்னியா விவாக திட்டம்’ மூலம் ஏராளமான இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், பஸ்டர் மாவட்டம், ஜகதல்பூர் பகுதியில் முதல்- மந்திரி ரமன் சிங் முன்னிலையில் இன்று 1100 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது. #tamilnews  #Massmarriage #Chhattisgarh #1100couples

Tags:    

Similar News