செய்திகள்

இந்தியா - மியான்மர் எல்லையில் ரூ.5 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது

Published On 2018-03-11 09:14 GMT   |   Update On 2018-03-11 09:14 GMT
மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது ரூ.4.8 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது. #Manipur #Goldbarsseized

இம்பால்:

மணிப்பூர் மாநிலத்தில் இந்தியா - மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது ரூ.4.8 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பிடிபட்டது.

மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இப்பகுதியில் அதிக அளவிலான கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதை தடுப்பதற்காக அசாம் ரைபிள்ஸ் எனும் சிறப்பு பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் டெங்நவ்பால் மாவட்டத்தில் உள்ள இம்பால் - மோரே நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோரேவில் இருந்து இம்பால் நகருக்கு சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் தங்கம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த பாதுகாப்பு படையினர், வாகன ஓட்டுனரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாகனத்தில் 97 தங்க கட்டிகள் கடத்தி வரப்பட்டதாகவும், அவற்றின் மதிப்பு ரூ.4.8 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Manipur #Goldbarsseized
Tags:    

Similar News