செய்திகள்

மூன்று வண்ணங்களுடன் கர்நாடக மாநிலத்திற்கென பிரத்யேக கொடி அறிமுகம்

Published On 2018-03-08 09:47 GMT   |   Update On 2018-03-08 09:47 GMT
மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களுடன் கர்நாடக மாநிலத்திற்கென பிரத்யேக கொடியை முதல்வர் சித்தராமையா அறிமுகப்படுத்தினார். #Karnataka
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்திற்கென தனி கொடியை வடிவமைக்க கடந்த ஆண்டு அம்மாநில அரசு குழு ஒன்றை அமைத்தது. இதற்கு, மத்திய அரசு சார்பில் வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இன்று காலை ஹம்பா நாகராஜ் தலைமையிலான கொடி வடிவமைப்பு குழு கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது.

இந்த கூட்டத்தில் கன்னட மொழி ஆதரவு இயக்கங்கள் கலந்து கொண்டன. கூட்டத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட கொடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள கொடியின் நடுவில் கர்நாடக அரசின் இலச்சினை அமைந்துள்ளது.

மஞ்சள் மன்னிப்பையும், வெள்ளை அமைதியையும், சிவப்பு துணிச்சலையும் காட்டுவதாக கொடி வடிவமைப்பு குழு கூறியுள்ளது. இந்த கொடி மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்த உடன் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கொடி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karnataka
Tags:    

Similar News