செய்திகள்

ஆணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி 2 ஏவுகணை - இரவில் நடத்தப்பட்ட சோதனை வெற்றி

Published On 2018-02-21 18:24 GMT   |   Update On 2018-02-21 18:24 GMT
ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் உள்ள அபதுல் கலாம் தீவில் இன்று இரவு நடத்தப்பட்ட அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலசோர்:

ஒடிசா மாநிலம் பலசோர் மாவட்டத்தில் உள்ள அபதுல் கலாம் தீவில் இன்று இரவு நடத்தப்பட்ட அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது என பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தின் பலசோர் மாவட்டத்தில் உள்ள அப்துல் கலாம் தீவில் பல்வேறு ஏவுகணை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிரித்வி 2 ஏவுகணையை இன்று இரவு 8. 30 மணியளவில் சோதனை செய்து பார்த்தனர். இரவு நேரத்திலும் குறிப்பிட்ட இலக்கை அடையாளம் கண்டு தாக்கும் சோதனையில், கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை மிகவும் துல்லியமாக தனது இலக்கை அடைந்தது.

இந்த ஏவுகணை 500 முதல் 1000 கிலோ எடையை தாங்கும் சக்தி கொண்டது. திரவ எரிபொருளால் இயங்கும் தன்மை கொண்டது. இந்த ஏவுகணை 350 கி.மீ. தூரம் வரை தாக்கும் வல்லமை கொண்டது.

ஜனவரி 18-ம் தேதி நடந்த அக்னி-5 ஏவுகணை சோதனை, பிப்ரவரி 6-ம் தேதி நடந்த அக்னி-1 ஏவுகணை சோதனை, நேற்று முன்தினம் நடந்த அக்னி-2 ஏவுகணை சோதனை ஆகியவற்றின் வெற்றியை தொடர்ந்து நேற்று நடத்திய பிரித்வி-2 ஏவுகணை சோதனையும் வெற்றி அடைந்துள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு இந்த ஏவுகணை சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News