செய்திகள்

மாநில கட்சிகளை தாண்டி கமல் கட்சி வளர்வது கடினம்: வீரப்ப மொய்லி சொல்கிறார்

Published On 2018-02-21 12:53 GMT   |   Update On 2018-02-21 12:53 GMT
தமிழகத்தில் மாநில கட்சிகளைத் தாண்டி கமல் தொடங்கும் கட்சி வளர்வதற்கு குறைந்த அளவே வாய்ப்பு உள்ளதாக வீரப்ப மொய்லி கூறியுள்ளார். #kamalhaasan #political #veerappamoily
பெங்களூரு:

நடிகர் கமல் இன்று தனது அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட உள்ள நிலையில், மூத்த காங்கிரஸ்  தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான வீரப்ப மொய்லி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டின் முன்னணி நடிகரான கமல் ஹாசனின் கட்சி வளர்வதற்கு அரசியலில் பெரிய அளவிற்கு வெற்றிடம் இல்லை. சொந்த பலத்தில் அவரது கட்சி வளர்வதற்கு குறைந்த அளவே வாய்ப்பு உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. என இரண்டு மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தும் தனிக் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

அதனால், இந்த இரண்டு முக்கிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் தவிர, பிற பிராந்திய கட்சிகள் தலையெடுக்க தேவையான அரசியல் வெற்றிடம் இருப்பதாக நினைக்கவில்லை. அ.தி.மு.க. உடைந்து அதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பலாம் என கமல் நினைத்திருப்பார். ஆனால் அது நடக்கும் என நான் நினைக்கவில்லை. 

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews #kamalhaasan #political #veerappamoily
Tags:    

Similar News