செய்திகள்

சிங்வி மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் - பழிவாங்கும் நடவடிக்கை என காங். குற்றச்சாட்டு

Published On 2018-02-21 00:31 GMT   |   Update On 2018-02-21 02:03 GMT
நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சிங்வியின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர். #PNBFraud #SinghviWife
புதுடெல்லி:

நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சிங்வியின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார்.

சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் தலைமறைவானது தெரிய வந்தது. தற்போது நியூயார்க்கில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அவருடன் உறவினர் மெகுல் சோசி மற்றும் குடும்பத்தினர் தங்கியுள்ளனர். இவர்களை கைது செய்வதற்காக சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது.

இதற்கிடையே நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தில் தலைமை நிதித்துறை தலைவராக இருந்த அம்பானியின் உறவினர் விபுல் அம்பானியை சிபிஐ நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சிங்வியின் மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், கடந்த ஐந்து தினங்களாக மத்திய அரசின் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை உள்பட மற்ற நிறுவனங்கள் செயல்பட்டு ஒரே ஒரு பெயரை மட்டுமே கண்டுபிடித்துள்ளன. அதுவும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சிங்வி மனைவிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் விடுத்துள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லாமல் வேறென்ன? என கேள்வி எழுப்பினார்.  #PNBFraud #SinghviWife #tamilnews
Tags:    

Similar News