செய்திகள்

நிரவ் மோடி விவகாரத்தில் தொடர்புடைய திருபாய் அம்பானி மருமகன் விபுல் அம்பானி கைது

Published On 2018-02-20 18:22 GMT   |   Update On 2018-02-20 18:22 GMT
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக, திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானியை சி.பி.ஐ. இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. #VipulAmbani #PNBFraud
புதுடெல்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக, திருபாய் அம்பானியின் மருமகன் விபுல் அம்பானியை சி.பி.ஐ. இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பிச் சென்று விட்டார்.

சி.பி.ஐ. புகார் தெரிவித்த உடனேயே கடந்த ஜனவரி 1-ம் தேதி அவர் தலைமறைவானது தெரிய வந்தது. தற்போது நியூயார்க்கில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அவருடன் உறவினர் மெகுல் சோசி மற்றும் குடும்பத்தினர் தங்கியுள்ளனர்.

இவர்களை கைது செய்வதற்காக சி.பி.ஐ. சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளது. இதற்காக நேச நாட்டைச் சேர்ந்த குற்றவாளி ஒருவரை கண்டுபிடிக்க பிறப்பிக்கப்படும் பரவல் அறிவிப்பை வெளியிடுமாறு சர்வதேச போலீசை கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே நிரவ் மோடிக்கு உடந்தையாக செயல்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் 3 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனத்தில் தலைமை நிதித்துறை தலைவராக இருந்த அம்பானியின் உறவினர் விபுல் அம்பானியை சிபிஐ இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், நிரவ் மோடிக்கு சொந்தமாக பயர் ஸ்டார் வைர நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் தலைமை நிதித்துறை தலைவராக இருந்து வருபவர் அம்பானியின் உறவினர் விபுல் அம்பானி.

சிபிஐ அதிகாரிகள் இந்த நிறுவனம் தொடர்பாக நேற்று முதல் தீவிர விசாரணை நடத்தினர். இதையடுத்து, விபுல் அம்பானி மற்றும் மூத்த நிர்வாகிகள் 4 பேரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக அம்பானியின் மருமகன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #VipulAmbani #PNBFraud #tamilnews
Tags:    

Similar News