செய்திகள்

மேகாலயா சட்டசபை தேர்தல்: தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் வேட்பாளர் பலி

Published On 2018-02-18 18:49 GMT   |   Update On 2018-02-18 18:49 GMT
மேகாலயாவில் பிரச்சார கூட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜொனதன் சங்மா உயிரிழந்தார். #Meghalayapolls #NCPcandidate #JonathanSangma
சிலாங்:

திரிபுரா, மேகாலயா, நாகலாந்து ஆகிய 3 மாநில சட்டசபைக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் வரும் 18-ம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்தில் வரும் 27-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மார்ச் 3-ம் தேதி நடக்கிறது.

இத்தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், துரா சட்டமன்ற தொகுதிக்கான தேசியவாத காங்கிரஸ் கட்சி வேட்பாளரான ஜொனதன் சங்மா, கிழக்கு காரோ மலைப்பகுதியில் நேற்று
பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் ஒரு வெடிகுண்டு வெடித்தது. இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். அப்போது சில தீவிரவாதிகள் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஜொனதன் சங்மா உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் வேட்பாளர் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Meghalayapolls #NCPcandidate #JonathanSangma #militantattack #tamilnews
Tags:    

Similar News