செய்திகள்

தாஜ்மஹாலை குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து ரசித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

Published On 2018-02-18 06:33 GMT   |   Update On 2018-02-18 06:33 GMT
அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை இன்று தனது குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து ரசித்தார். #JustinTrudeau
லக்னோ:

அரசுமுறை சுற்றுப்பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார். டெல்லி பாலம் விமானநிலையத்தில் நேற்று மாலை வந்திறங்கிய ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி மற்றும் குழந்தைகளை வெளியுறவு அதிகாரிகள் மற்றும் கனடா நாட்டு தூதர்கள் வரவேற்றனர். 

இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடேயூ, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் உள்பட பலரை சந்தித்து பேசுகிறார். அப்போது அவர்கள் முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் சில புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. மேலும், கனடா - இந்திய தொழிலதிபர்கள் பங்கேற்கும் கருத்தரங்கிலும், டெல்லியில் நடைபெறவுள்ள மாற்றத்துக்கான இளைஞர்கள் கருத்தரங்கிலும் ஜஸ்டின் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் இன்று காலை சுற்றிப்பார்த்தார். தாஜ்மஹாலின் முன்னே நின்று குடும்ப புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

தனது சுற்றுப்பயணத்தில் அகமதாபாத் சபர்மதி ஆசிரமம் மற்றும் காந்தி நகரின் அக்‌ஷர்தாம் ஆலயம், பஞ்சாப்பின் அம்ரிஸ்டர் நகரில் உள்ள சீக்கிய பொற்கோவில், டெல்லி ஜும்மா மசூதியையும் ஜஸ்டின் ட்ரூடோ பார்வையிட உள்ளார். #JustinTrudeau #TamilNews
Tags:    

Similar News