செய்திகள்

ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பில் இந்திய கடற்படையில் இரண்டு நவீன மீட்பு நீர்மூழ்கிகள்

Published On 2018-02-18 04:07 GMT   |   Update On 2018-02-18 04:07 GMT
கடலின் அடியில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட இரண்டு நவீன மீட்பு நீர்மூழ்கிகள் வரும் ஜூலை மாதத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது.
புதுடெல்லி:

ஆழ்கடலின் அடியில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக இரண்டு நவீன மீட்பு நீர்மூழ்கிக் கப்பல்களை மத்திய அரசு வாங்க முடிவெடுத்தது. இதற்கான ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜே.எஃப்,டி நிறுவனத்திடம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்யப்பட்டது. 

இந்த நீர்மூழ்கிகள் தற்போது தயாரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கிகள் வரும் ஜூலை மாதம் இந்திய கடற்படையில் இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

72 கடற்படை அதிகாரிகள் ஸ்காட்லாந்து சென்று இந்த நீர்மூழ்கிகளை இயக்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  #TamilNews
Tags:    

Similar News