செய்திகள்

சிட்டி யூனியன் வங்கியில் ரூ.12.8 கோடி மோசடி

Published On 2018-02-18 01:07 GMT   |   Update On 2018-02-18 01:07 GMT
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.11,700 கோடி மோசடி பாணியில், சென்னையை சேர்ந்த சிட்டி யூனியன் வங்கியில் ரூ.12 கோடியே 80 லட்சம் மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #CityUnionBank #Fraud
புதுடெல்லி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ரூ.11,700 கோடி மோசடி பாணியில், சென்னையை சேர்ந்த சிட்டி யூனியன் வங்கியில் ரூ.12 கோடியே 80 லட்சம் மோசடி நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7-ந்தேதி, வங்கியில் நடைபெற்ற தணிக்கையின்போது, இது தெரியவந்ததாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்ததுபோல், போலியான உறுதியளிப்பு கடிதங்களை பயன்படுத்தி, தங்களது ‘ஸ்விப்ட்’ என்ற பணம் அனுப்பும் முறையில், 3 தவணைகளாக மொத்தம் ரூ.12 கோடியே 80 லட்சம் அனுப்பப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில், நியூயார்க்கில் உள்ள வங்கி மூலமாக துபாயில் உள்ள வங்கிக்கணக்குக்கு அனுப்பப்பட்ட 5 லட்சம் அமெரிக்க டாலர், முடக்கப்பட்டு தங்களிடமே திரும்பி வந்து விட்டதாக அவ்வங்கி கூறியுள்ளது.

இதேபோல், துருக்கியிலும், சீனாவிலும் உள்ள வங்கிக்கணக்குகளுக்கு முறைகேடாக பணம் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த பணத்தை திரும்பப்பெற அந்நாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மூலமாக முயன்று வருவதாகவும் சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ளது.  #CityUnionBank #Fraud #tamilnews
Tags:    

Similar News