செய்திகள்

இந்த வாரம் இந்தியா வருகிறார் ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி

Published On 2018-02-13 03:53 GMT   |   Update On 2018-02-13 03:53 GMT
ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி இந்த வாரம் இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லி:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஈரானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஈரான் அதிபர் ஹசன் ருஹானியை மோடி சந்தித்து பேசினார். அவரை இந்தியாவிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி  இந்த வாரம் இந்தியா வர உள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. அநேகமாக அவர் வியாழக்கிழமை ஈரானில் இருந்து இந்தியாவிற்கு புறப்படுவார் என்றும், இரு நாட்டு வர்த்தக உறவுகள் மட்டுமின்றி பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்து அவர் விவாதிக்கலாம் என்றும் ஐஎஸ்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

15-ம்தேதி ஈரானில் இருந்து புறப்பட்டு வரும் அதிபர் ஹசன் ரவுஹானி வரும் 17-ம் தேதி இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரானின் சபஹார் துறைமுகத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட முக்கிய திட்டங்களில் இந்தியாவும் ஈரானும் இணைந்து செயல்படுகிறது. ஈரானில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளில் இந்தியா மிக முக்கியமான நாடு ஆகும். அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுக்கு தடை விதிக்கப்பட்ட காலத்திலும் இந்த வர்த்தக உறவு நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News