செய்திகள்

மும்பை தீ விபத்து ஏற்பட்ட கமலா மில் வளாகத்தின் உரிமையாளர் கைது

Published On 2018-01-22 22:49 GMT   |   Update On 2018-01-22 22:49 GMT
மும்பை கமலா மில் தீவிபத்து தொடர்பாக, அந்த மில் அமைந்திருந்த வளாகத்தின் உரிமையாளர் ரமேஷ் கோவானியை போலீசார் கைது செய்துள்ளனர். #KamalamMillsFire #RameshGowani
மும்பை:

மும்பை கமலா மில் தீவிபத்து தொடர்பாக, அந்த மில்லின் உரிமையாளர் ரமேஷ் கோவானியை போலீசார் கைது செய்துள்ளனர்.  

மும்பை லோயர் பரேல் சேனாபதி பாபத் மார்க் பகுதியில் கமலா மில் வளாகம் உள்ளது. இங்கு ஓட்டல்கள், மது விடுதிகள், பிரபல தனியார் தொலைக்காட்சி அலுவலகங்கள் உள்பட பல அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இங்குள்ள 4 மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலுள்ள ‘ஒன் அபோவ்’ என்ற ஒரு ஓட்டலில் கடந்த மாதம் 28-ம் தேதி இரவு நள்ளிரவு 12 மணிக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். 55 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கமலா மில் வளாக உரிமையாளர் ரமேஷ் கோவானியை போலீசார் நேற்று கைது செய்தனர். செம்பூர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த அவரை வழிமறித்து போலீசார் கைது செய்ததாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக ‘ஒன் அபோவ்’ ஓட்டல் உரிமையாளர்கள் ஜிகார் சங்வி, கிரிபேஷ் சிங்வி மற்றும் அப்ஜீத் மன்கர் மற்றும்  மேலாளர் இரண்டு பேரை மும்பை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #KamalaMillsFire #RameshGowani #tamilnews
Tags:    

Similar News