செய்திகள்

இந்தியாவில் 73 சதவிகித சொத்துக்கள் 1 சதவிகித கோடீஸ்வர்கள் கையில் உள்ளது - ஆய்வில் தகவல்

Published On 2018-01-22 19:02 GMT   |   Update On 2018-01-22 19:02 GMT
இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டில் உருவான ஒட்டுமொத்த சொத்துக்களில் 73 சதவிகிதத்தை, ஒரு சதவீத கோடீஸ்வரர்கள் ஆண்டு வருவதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Oxfamsurvey
புதுடெல்லி:

உலகம் முழுவதும் நடைபெற்று வரும் பொருளாதார நடவடிக்கைகள், இதனால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பிரிட்டனை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் 'Reward Work, Not Wealth' என்ற பெயரில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதும் உருவான ஒட்டுமொத்த சொத்துக்களில் 82 சதவிகிதம் அளவு வெறும் ஒரு சதவிகித பணக்காரர்களிடம் உள்ளது.

குறிப்பாக இந்தியாவின் மொத்த சொத்துக்களில் 73 சதவீதம், ஒரு சதவிகித கோடீஸ்வரர்கள் கையில் உள்ளது. கடந்த ஆண்டு அவர்களால் உருவாக்கப்பட்ட சொத்து மதிப்பு 20.9 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, மத்திய அரசின் 2017-18 பட்ஜெட்டிற்கு நிகரான தொகை. இதில் 37 சதவிகிதம் பேர் குடும்ப சொத்துக்களின் மூலம் பணக்காரர்களானவர்கள்.

இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார திட்டங்கள், ஏற்கனவே சொத்து வைத்துள்ளவர்கள் புதிய தொழில்களை தொடங்கி அதில் அதிக வருவாய் ஈட்டும் சூழல்களை உருவாகியுள்ளது. இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 58 சதவிகிதமாக அதிகரித்துள்ளது எனவும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. #Oxfamsurvey #tamilnews
Tags:    

Similar News