செய்திகள்

என்.எஸ்.ஜி தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதீப் லக்டாகியா நியமனம்

Published On 2018-01-19 22:29 GMT   |   Update On 2018-01-19 22:29 GMT
தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) தலைமை இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதீப் லக்டாகியாவை நியமித்து கேபினட் கமிட்டி முடிவெடுத்துள்ளது.
புதுடெல்லி:

வி.ஐ.பி.கள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு ஆபரேஷன்களை மேற்கொள்வதற்காக கடந்த 1984-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) தோற்றுவிக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயக்கும் இந்த படையின் தலைமை இயக்குநராக தற்போது எஸ்பி சிங் பொறுப்பு வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் இம்மாத இறுதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சுதீப் லக்டாகியாவை என்.எஸ்.ஜி.யின் புதிய தலைமை இயக்குநராக நியமித்து கேபினட் கமிட்டி முடிவெடுத்துள்ளது. 1984-ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான லக்டாகியா தற்போது சி.ஆர்.பி.எப் சிறப்பு டி.ஜி.யாக உள்ளார்.

அடுத்தாண்டு ஜூலை மாதம் முதல் புதிய பதவியில் லக்டாகியா இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News