செய்திகள்

ஆந்திராவில் ரூ.1 கோடி குட்கா - கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

Published On 2018-01-18 06:08 GMT   |   Update On 2018-01-18 06:08 GMT
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு மினி வேனில் கடத்தி சென்ற ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா-கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நகரி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வீரம்பள்ளியில் தேசிய நெடுஞ்சாலை வழியாக வாகனத்தில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து வந்த மினி வேனை நிறுத்துமாறு சைகை காட்டினர்.

ஆனால் வேனை டிரைவர் நிறுத்தாமல் வேகமாக சென்றார். உடனே போலீசார் விரட்டி சென்று வேனை மடக்கினர். அதில் இருந்த 3 பேரை பிடித்து வேனில் சோதனை செய்தனர். வேனில் 270 மூட்டைகளில் குட்கா போன்ற பொருட்கள் மற்றும் 7600 கிராம் கஞ்சா இருந்தது. இதில் குட்காவின் மதிப்பு ரூ.1.08 கோடியாகும்.

விசாரணையில் குட்கா மற்றும் கஞ்சாவை கடத்தியது. கிருஷ்ணா, அசோக், சந்திரய்யா என்பதும் சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரி, கங்காவரம், தெனாலி ஆகிய இடங்களுக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது.

போதை பொருட்களை சென்னையில் யாரிடம் வாங்கினார்கள். யாரிடம் கொடுக்க கொண்டு சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
Tags:    

Similar News