செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வருக்கு உடல் நலக்குறைவு - பணிக்கு வரவில்லை

Published On 2018-01-17 19:49 GMT   |   Update On 2018-01-17 19:49 GMT
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி செல்லமேஸ்வருக்கு உடல் நலக்குறைவு காரணமாக கோர்ட்டுக்கு வரவில்லை என்றும் ஒரு நாள் அவர் விடுப்பு எடுத்துள்ளார் எனவும் சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்று கடந்த 12-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதிகள் ஜே.செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தையும் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டனர். பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் சங்கம் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நேற்றுமுன்தினம் 4 நீதிபதிகளையும் சந்தித்து பேசி அவர்களுடைய மனக் குறைகளை கேட்டறிந்தார். இதுபோன்ற சந்திப்பு 17-ந்தேதி(நேற்று) காலையும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்தநிலையில் 4 நீதிபதிகளில் ஒருவரான ஜே.செல்லமேஸ்வர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பணிக்கு வரவில்லை. அவர் உடல் நலக்குறைவு காரணமாக கோர்ட்டுக்கு வரவில்லை என்றும் ஒரு நாள் அவர் விடுப்பு எடுத்துள்ளார் எனவும் சுப்ரீம் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

Tags:    

Similar News