செய்திகள்

தமிழக டாக்டர் சரத் பிரபு தற்கொலை செய்திருக்கலாம்: டெல்லி போலீஸ்

Published On 2018-01-17 10:28 GMT   |   Update On 2018-01-17 10:28 GMT
டெல்லி மருத்துவமனையில் மருத்துவ பட்டமேற்படிப்பு படித்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் சரத் பிரபு, பொட்டாசியம் குளோரைடு செலுத்தி தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறை கருதுகிறது.
புதுடெல்லி:

திருப்பூர் மங்கலம் ரோடு எம்.பி.எஸ். தியேட்டர் பின்புறம் உள்ள பாரப்பாளையத்தை சேர்ந்தவர் டாக்டர் சரத் பிரபு (வயது 28). இவர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட யுசிஎம்எஸ் கல்லூரியில் மருத்துவ பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று கடந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் இந்த கல்லூரியில் சேர்ந்துள்ளார். 
 
இந்த நிலையில் சரத் பிரபு இன்று காலை அவர் தங்கியிருந்த விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருடன் தங்கியிருந்த அவரது நண்பர், வீட்டுக்கு தொலைபேசி மூலம்  இதனை கூறியுள்ளார். அவரது தந்தை உடனடியாக விமானம் மூலம் டெல்லிக்கு விரைந்தார். 

மேலும் இது குறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மாணவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

டாக்டர் சரத் பிரபு கையில் ஊசி மூலம் விஷம் செலுத்தி தற்கொலை செய்திருக்கலாம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டாக்டர் சரத் பிரபு இறந்து கிடந்த கழிவறையில் ஊசி மற்றும் பொட்டாசியம் குளோரைடு கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் கூறுகின்றனர். சரத் பிரபு தற்கொலை செய்ய வாய்ப்பு இல்லை என்றும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். 

இதேபோல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்.எஸ். படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சரவணன் என்ற மாணவர் 2016-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News