செய்திகள்

முத்தலாக் தடை மசோதா டெல்லி மேல்-சபையில் நாளை தாக்கல்

Published On 2018-01-02 08:05 GMT   |   Update On 2018-01-02 08:05 GMT
முத்தலாக் தடை மசோதா டெல்லி மேல்-சபையில் நளை தாக்கல் செய்யப்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் ‘முத்தலாக்’ நடைமுறை சட்ட விரோதம் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆகஸ்ட் 22-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. இந்த நடைமுறைக்கு மாற்றாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசை அறிவுறுத்தியது.

இதையடுத்து முத்தலாக் தடை மசோதா கடந்த 28-ந்தேதி பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் நடைமுறையை பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு அதிக பட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.



இதற்கிடையே முத்தலாக் தடை மசோதா டெல்லி மேல்-சபையில் இன்று தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த மசோதா நாளைதான் டெல்லி மேல்-சபையில் தாக்கல் செய்யப்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி அனந்தகுமார் தெரிவித்தார்.
Tags:    

Similar News