செய்திகள்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ‘முத்தலாக்’ மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

Published On 2017-12-28 09:06 GMT   |   Update On 2017-12-28 09:06 GMT
மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ‘முத்தலாக்’ மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து பேசினர். #TripleTalaqBill
புதுடெல்லி:

ஒரே நேரத்தில் மூன்றுமுறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் மத்திய சட்டமந்திரி ரவிஷங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவில் உள்ள கிரிமினல் சட்டப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என இம்மசோதா மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, அ.தி.மு.க சார்பில் பேசிய அன்வர் ராஜா, இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து இந்த மசோதாவை மிகக்கடுமையாக எதிர்த்து பேசிய ஐதராபாத் எம்.பி ஓவைசி, இந்த மசோதா அடிப்படை உரிமைகளை மீறுகிறது மற்றும் முறையான சட்ட இணக்கம் இதில் இல்லை என்பதால் திரும்ப பெற வேண்டும் என்று கூறினார்.

உறுப்பினர்களுக்கு பதிலளித்து பேசிய ரவிஷங்கர் பிரசாத், “பெண்களின் உரிமைகள் மற்றும் நீதியை பாதுகாக்கவே, இந்த மசோதா. இதில், மதத்திற்கு தொடர்பில்லை” என்று கூறினார். உணவு இடைவேளைக்கு பின்னர் மீண்டும் விவாதம் நடக்க உள்ளது.  #TripleTalaqBill 
Tags:    

Similar News