செய்திகள்

பஞ்சாப் எல்லைப்பகுதியில் 13.5 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

Published On 2017-12-25 22:46 GMT   |   Update On 2017-12-25 22:46 GMT
பஞ்சாப் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 13.5 கிலோ ஹெராயின் போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அமிர்தசரஸ்:

இந்திய-பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் அருகேயுள்ள தவோகே என்ற இடத்தில் பாதுகாப்பு பணியில் எல்லை பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லைப்பகுதியில் கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதை கண்ட பாதுகாப்பு படையினர், அவர்களை நோக்கு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து கடத்தல் கும்பல் அப்பகுதியில் இருந்து தப்பியோடியுள்ளது. அதன்பின் அப்பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர்  தேடுதல்வேட்டை நடத்தியுள்ளனர். அப்போது அந்த இடத்தில் 12 பார்சல்கள் கிடந்தன.

அதை அவர்கள் திறந்து பார்த்த போது அதில் ஹெராயின் என்ற உயர்ரக போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்து கைப்பற்றினர். அதைத்தொடர்ந்து பரோபால் மற்றும் கோர்கா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 13.5 கிலோ அளவிலான போதைப்பொருளை பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்தனர். 
Tags:    

Similar News