செய்திகள்

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. வீரேந்திர குமார்

Published On 2017-12-20 10:27 GMT   |   Update On 2017-12-20 10:27 GMT
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்.பி.யான வீரேந்திர குமார், தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை வெங்கையா நாயுடுவுக்கு இன்று அனுப்பியுள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், குஜராத் தேர்தலின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றி விமர்சனம் செய்த பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வந்ததால் கூட்டத்தொடர் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த  ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வீரேந்திர குமார், தனது எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:



நான் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.யாக இருந்து வருகிறேன். பீகார் மாநிலத்தில் அமைக்கப்பட்ட மெகா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறி, சங் பரிவார் அமைப்பான பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததை என்னால் ஏற்க முடியவில்லை.

சமீபத்தில் வெளியான குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி அல்ல. எனது ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News