செய்திகள்

காஷ்மீர்: 53 முறை ரத்த தானம் செய்த பெண் டாக்டருக்கு விருது

Published On 2017-12-17 12:01 GMT   |   Update On 2017-12-17 12:01 GMT
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 53 முறை ரத்த தானம் செய்த பெண் டாக்டரின் பொதுச்சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தின் ஜம்மு நகரில் உள்ள போலீஸ் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருபவர் கிரண் சர்மா. இம்மாநிலத்தின் டோடா மாவட்டத்தில் பிறந்த இவர் 1987-ம் ஆண்டு மாணவியாக இருந்த காலகட்டத்தில் இருந்து தானாகவே முன்வந்து ரத்த தானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக 53 முறை ரத்த தானம் செய்துள்ள இவரது பொதுச்சேவையை பாராட்டி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரில் நடைபெற்ற இந்திய ரத்த மாற்று சங்கத்தின் 42-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
Tags:    

Similar News