செய்திகள்

‘இரும்பு மனிதர்’ வல்லபாய் படேல் மறைந்த தினம்: பிரதமர் மோடி நினைவு அஞ்சலி

Published On 2017-12-15 03:53 GMT   |   Update On 2017-12-15 03:54 GMT
இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினத்தை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
புதுடெல்லி:

சுதந்திர போராட்ட வீரரான சர்தார் வல்லபாய் படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார். ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இதன் காரணமாக இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி வல்லபாய் படேல் மரணம் அடைந்தார். இன்று அவரது நினைவு நாளை ஒட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார், “சர்தார் படேல் மறைந்த தினமான இன்று அவரை நினைவு கூர்வோம். ஒவ்வொரு இந்தியர்களும் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என்று மோடி பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News