செய்திகள்

போதைப்பொருளை கைப்பற்றினால் ரூ.20 லட்சம் வரை பரிசு - அதிகாரிகளுக்கு மத்திய அரசு கூடுதல் சலுகை

Published On 2017-12-13 00:36 GMT   |   Update On 2017-12-13 00:36 GMT
போதைப்பொருள், மனநல மருந்துகளை கைப்பற்றும் அதிகாரிக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு கூடுதல் சலுகையை அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

போதைப்பொருட்களை கைப்பற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. போதைப்பொருளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு இந்த துறை பரிசுத்தொகை வழங்கி வருகிறது. தற்போது, துணை கமிஷனர் அந்தஸ்து அதிகாரிக்கு ஒரு பறிமுதல் சம்பவத்துக்கு அதிகபட்சம் ரூ.50 ஆயிரமும், இணை கமிஷனர் மற்றும் கூடுதல் கமிஷனருக்கு ரூ.25 ஆயிரம் வரையும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த பரிசுத்தொகையை உயர்த்தி உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, போதைப்பொருள், மனநல மருந்துகளை கைப்பற்றும் அதிகாரி ஒருவர், தனது பணிக்காலம் முழுவதற்கும் அதிகபட்சமாக ரூ.20 லட்சம் பரிசுத்தொகை பெற தகுதி உடையவர் ஆவார். ஒரு சம்பவத்துக்கு ரூ.50 ஆயிரம் பெறலாம். இருப்பினும், விதிவிலக்கான சம்பவங்களில், ஒரு நபருக்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படும்.

ஆய்வுக்கூட பரிசோதனையில், போதைப்பொருள் உறுதி செய்யப்பட்டவுடனே, பரிசுத்தொகையில் 50 சதவீதம் வரை கிடைக்கும்.

மத்திய, மாநில, யூனியன் பிரதேச அதிகாரிகள், தகவல் கொடுப்பவர்கள் ஆகியோர் பரிசுத்தொகை பெற தகுதி உடையவர்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 
Tags:    

Similar News