செய்திகள்

குஜராத் பரிதார் அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேலுக்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு

Published On 2017-11-24 08:39 GMT   |   Update On 2017-11-24 08:39 GMT
குஜராத் பரிதார் அமைப்பின் தலைவரான ஹர்திக் பட்டேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் படி அவருக்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமுதாய அமைப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராட்டங்களை நடத்தியுள்ளார். பரிதார் அந்தோலன் சமிதி என்ற இயக்கத்தை நடத்தி வரும் அவர், அங்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில், ஹர்திக் பட்டேலுக்கு மாநில போலீசார் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில், அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை அமைப்புகள் அறிக்கையளித்துள்ளன. இதன் காரணமாக ஹர்திக் பட்டேலுக்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 கம்மேண்டோ வீரர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் அவரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
Tags:    

Similar News