search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய உள்துறை அமைச்சகம்"

    • நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில்,
    • செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வ கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்- அமித் ஷா

    ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (தீவிரவாத குற்றச்செயல் நடவடிக்கை குற்றச்சாட்டில் ஜெயிலில் இருக்கும் யாசின் மாலிக் தலைமையில் இயங்கி வந்த அமைப்பு), காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் மற்றும் இந்த அமைப்பில் இருந்து பிரிந்து செயல்படும் நான்கு அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, "நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில் செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வ கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (முக்தார் அகமகது வாஜா), ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (பாஷீர் அகமது டோட்டா), ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (குலாம் முகமது கான்), யாகூப் ஷேக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (அஜிஸ் ஷேக்) ஆகிய அமைப்புகளுக்கு தனித்தனியாக தடை செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மேலும், முகமது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி சட்டவிரோதமான அமைப்பு என மேலும் ஐந்து வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அமித் தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதம் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்த காரணத்திற்கான ஜம்மு-காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் அமைப்புக்கு ஐந்து வருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களையும், அமைப்புகளையும் மோடி அரசு காப்பாற்றாது" எனத் தெரிவித்துள்ளார்.

    • டிசம்பர் 13 சம்பவம் பெரும் பாதுகாப்பு குறைபாடாக விமர்சிக்கப்பட்டு வருகிறது
    • தேச பாதுகாப்பிற்கான பல முக்கிய அலுவல் கட்டிடங்களை சிஐஎஸ்எஃப் காத்து வருகிறது

    கடந்த டிசம்பர் 13 அன்று மக்களவைக்கு உள்ளே இருவர், பார்வையாளர்கள் அரங்கில் இருந்து அவை மையப்பகுதியில் குதித்து, கோஷங்களை எழுப்பியவாறு, தங்கள் காலணிகளில் மறைத்து வைத்திருந்த வர்ண புகை எழுப்பும் குப்பிகளை வீசி வெடிக்க செய்தனர்.

    அவைக்கு வெளியேயும் இருவர் (1 ஆண், 1 பெண்) இதே போன்று கோஷங்களை எழுப்பி, புகை குப்பிகளை வீசினர்.

    நால்வரையும் கைது செய்த டெல்லி காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

    மத்திய அரசிற்கு பெரும் தலைக்குனிவாகவும், பெரும் பாதுகாப்பு குறைபாடாகவும் கருதப்பட்ட இந்த சம்பவம் அரசியல் கட்சி தலைவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சகம் இது குறித்து விசாரித்து வந்த நிலையில், பாராளுமன்றத்தின் ஒட்டு மொத்த பாதுகாப்பு பொறுப்பை இனி டெல்லி காவல்துறையிடமிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF) வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


    மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் சிஐஎஸ்எஃப் பல மத்திய அரசாங்கங்களின் அலுவலகங்கள், அணு சக்தி மைய வளாகங்கள், விண்வெளி தளங்கள், சிவில் விமான தளங்கள், டெல்லி மெட்ரோ உள்ளிட்ட பல முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

    தற்போது உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாராளுமன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒரு ஆய்வை சிஐஎஸ்எஃப் நடத்தி வருகிறது.

    விரைவில் முழு பாதுகாப்பு பொறுப்பும் சிஐஎஸ்எஃப் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. இதன் பாதுகாப்பு வளையத்தில் புதிய மற்றும் பழைய பாராளுமன்ற கட்டிங்களின் மொத்த இடங்களும் அடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இது குறித்த இறுதி முடிவு வரும் நாட்களில் எடுக்கப்படும்.

    • தமிழகத்திற்கு வெள்ளத்தடுப்பு திட்டத்திற்காக முதல் தவணையாக இதே தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு 493.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    லட்சக்கணக்கான வீடுகள் இன்னும் தண்ணீருக்குள் உள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக பாதிப்பை சந்தித்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்துள்ளன.

    பால், குடிநீர் பற்றாக் குறையால் மக்களிடம் கடும் தவிப்பு நிலவுகிறது. வாகனப் போக்குவரத்து இன்று முதல் 90 சதவீதம் இயங்கத் தொடங்கியுள்ளது.

    பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிகமான மழை பெய்ததாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

    எனவே தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அதில் உதவி கேட்டிருந்தார்.

    இந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புயல் சேத விவரங்களை கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

    மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணையில் மத்திய அரசின் பங்கான ரூ.450 கோடியை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    மிச்சாங் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் வேறுபட்டாலும் இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநில அரசுகளுக்கு உதவ பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணை தொகையை முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்துக்கு ரூ.450 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த இரு மாநிலங்களுக்கும் ஏற்கனவே முதல் தவணை தொகை வழங்கப்பட்டு உள்ளது. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

    விரைவில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இதேபோல் முதல் முறையாக சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமித்ஷா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடந்த 8 ஆண்டுகளில் 3-வது பெரிய வெள்ளத்தை எதிர் கொண்டு உள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு தேசிய பேரிடர் தடுப்பு நிதியத்தின் கீழ் சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள நடவடிக்கைகளுக்கு ரூ.561.29 கோடி ஒதுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இதில் மத்திய அரசு உதவியாக ரூ.500 கோடி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சென்னை மழை வெள்ளத்தை சமாளிக்க கூடியதாக மாற உதவும். நகர்ப்புற வெள்ளத் தடுப்பு முயற்சியில் இது முதன்மையானது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    மாநில பேரிடர் நிதியின் கீழ் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நகர்புற வெள்ள தடுப்பு நிதியாக ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மத்திய அரசு ரூ.1011.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.
    • மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவுரங்காபாத்:

    மராட்டிய மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. இதுபற்றி அந்த மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியது.

    அதை ஏற்றுக்கொண்ட மத்திய உள்துறை அமைச்சகம் அவுரங்காபாத் நகரின் பெயரை மாற்ற ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து அவுரங்காபாத் நகர் இனி சத்ரபதி சம்பாஜி நகர் என்று அழைக்கப்படும்.

    இந்த தகவலை துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்நாவிஸ் டுவிட்டர் மூலம் அறிவித்துள்ளார். மராட்டியத்தில் உள்ள உஸ்மான்பாத் நகரின் பெயரும் தர்சிவா என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேருவோருக்கு மத்திய ஆயுதப் படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவில் முன்னுரிமை வழங்கப்படும்
    • அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு பணியை முடித்து வெளியே வரும் வீரர்களுக்கு வயது வரம்பிலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அக்னிபாத் வீரர்களுக்கு துணை ராணுவம், அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேருவோருக்கு மத்திய ஆயுதப் படை, அசாம் ரைபிள்ஸ் பிரிவில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டு பணியை முடித்து வெளியே வரும் வீரர்களுக்கு வயது வரம்பிலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் வீரர்கள் 2 படைப்பிரிவுகளிலும் சேருவதற்கு 3 வயது வரை விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அக்னிபாத்தின் முதல் பேட்ஜ் வீரர்கள் 2 படைப்பிரிவுகளிலும் சேருவதற்கு வயது வரம்பில் 5 வயது வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காளம் பஞ்சாயத்து தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை குறித்து மாநில அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #PanchayatElection #Pollviolence
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் பஞ்சாயத்து தேர்தல் இன்று காலை துவங்கியது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்காளத்தின் பல கிராம பகுதிகளில் அரசியல் கட்சியினரிடையே மோதல் வெடிக்கத் துவங்கியது. வாக்குச்சாவடிகளை கைப்பற்றுவது, பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் போன்றவை அரங்கேறின.



    நதியா மாவட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர் சவுஜித் பிராமனிக் அப்பகுதி மக்களால் அடித்துக் கொல்லப்பட்டார். பிரக்னாஸ் அம்டங்கா பகுதியில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும், சுமார் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    முர்ஷிதாபாத் பகுதியில் பாஜக பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த ஆரிப் அலி என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கணவன் மனைவி கொல்லப்பட்டு, அவர்களது வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது. அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறிய நிலையில் இதுவரை 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.



    இதையடுத்து, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி மற்றும் பல கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தேர்தல் வன்முறையை எதிர்த்து கொல்கத்தா நகரில் உள்ள மாநில தேர்தல் கமிஷன் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், தேர்தலின் போது மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து மாநில அரசு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. #PanchayatElection #Pollviolence

    ×