செய்திகள்

காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான விமானப்படை வீரர் குடும்பத்துக்கு பீகார் முதல் மந்திரி நிதியுதவி

Published On 2017-11-19 12:38 GMT   |   Update On 2017-11-19 12:38 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீர மரணம் அடைந்த விமானப்படை வீரரின் குடும்பத்துக்கு 11 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பாட்னா:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வடக்கில் உள்ள பன்டிப்போரா மாவட்டத்திற்குட்பட்ட சன்டர்கீர் கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று அந்த கிராமத்துக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்துக்கு செல்லும் நாற்புற சாலைகளையும் சுற்றி வளைத்தனர்.

தீவிரவாதிகள் பதுங்கி இருந்த இடத்தை நெருங்கி அவர்களை சரணடையுமாறு எச்சரித்தனர். எச்சரிக்கையை பொருட்படுத்தாத தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் 6 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்திய விமானப் படையை சேர்ந்த கமாண்டோ வீரர் ஜோதி பிரகாஷ் நிராலா என்பவரும் இந்த தாக்குதலில் பலியானார்.

பீகார் மாநிலத்தில் உள்ள ரோட்டாஸ் மாவட்டத்தை சேர்ந்த ஜோதி பிரகாஷ் நிராலாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார். அவரது உடல் முழு போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என தெரிவித்துள்ள நிதிஷ் குமார், மாநில அரசின் சார்பில் ஜோதி பிரகாஷ் நிராலாவின் குடும்பத்தாருக்கு 11 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News