செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத ஆதார் கட்டாயம்

Published On 2017-11-15 18:49 GMT   |   Update On 2017-11-15 18:49 GMT
உத்தரபிரதேசத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு கட்டாயம் தங்களுடன் ஆதார் அட்டையை உடன் எடுத்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் 6-ந் தேதி தொடங்குகிறது. இந்த 2 தேர்வுகளையும் சுமார் 67 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

உத்தரபிரதேசத்தில் பள்ளி இறுதி பொதுத் தேர்வின்போது ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் அதிக அளவில் நடப்பதாக பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. இதையடுத்து வரும் கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் அட்டையை அந்த மாநில கல்வி வாரியம் கட்டாயமாக்கி உள்ளது.

இதுபற்றி உத்தரபிரதேச கல்வி வாரியமான ‘மத்யமிக் சிக்‌ஷா பரிஷத்’ நேற்று பிறப்பித்த உத்தரவில், ‘10, 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு கட்டாயம் தங்களுடன் ஆதார் அட்டையை உடன் எடுத்து வரவேண்டும். இல்லையென்றால் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். போலியான பதிவு மற்றும் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளை தடுக்கவே ஆதார் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது’ என கூறப்பட்டு இருக்கிறது. 
Tags:    

Similar News