செய்திகள்

இந்தியர்களுக்கான விசா நடைமுறையை ஜனவரி முதல் தளர்த்துகிறது ஜப்பான்

Published On 2017-11-14 14:09 GMT   |   Update On 2017-11-14 14:10 GMT
சுற்றுலா மற்றும் வணிக காரணங்களுக்காக ஜப்பான் வரும் இந்தியர்களுக்கான விசா நடைமுறையை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. புதிய விதிமுறைகள் வரும் ஜனவரி முதல் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

இந்தியா - ஜப்பான் இடையே உள்ள நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், சுற்றுலா மற்றும் வணிக காரணங்களுக்காக ஜப்பான் வரும் இந்தியர்களுக்கு விசா நடைமுறைகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது. புதிய விதிமுறைகளை அந்நாட்டு தூதரகம் இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஓராண்டில் அதிகபட்சமாக இருமுறை ஜப்பான் சென்றவர்களுக்கு 5 ஆண்டுகள் செல்லத்தக்க மற்றும் 90 நாட்கள் ஜப்பானில் தங்கிக்கொள்ளும் வகையிலான புதிய விசா எடுத்துக்கொள்ளலாம். இந்த விதிமுறை தளர்வானது சுற்றுலா மற்றும் வணிகம் சம்பந்தமாக அடிக்கடி ஜப்பான் வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நடைமுறைகள் வரும் ஜனவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News