செய்திகள்

உ.பி.யில் நீல நிறத்திற்கு மாறும் போக்குவரத்து போலீஸ் சீருடை

Published On 2017-11-10 10:45 GMT   |   Update On 2017-11-10 10:45 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் போக்குவரத்து போலீசாரின் சீருடை நிறம் காக்கி நிறத்திலிருந்து நீல நிறத்திற்கு டிசம்பர் 1 முதல் மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
லக்னோ:

உத்தரப்பிரேத மாநிலத்தில் நடைபெற்ற டி.ஜி.பி. கூட்டத்தில் போக்குவரத்து போலீசாரின் சீருடை நிறத்தை நீல நிறமாக மாற்றுவது குறித்து ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்போது மற்ற போலீசிடமிருந்து  போக்குவரத்து போலீசார் தனியாக தெரிவதற்கு சீருடை நிறம் மாற்றப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தற்சமயம் போக்குவரத்து போலீசார் வெள்ளை சட்டை மற்றும் காக்கி நிறத்தில் சீருடை அணிந்து பணிபுரிகின்றனர். இனி காக்கி நிற பேண்டிற்கு பதிலாக நீல நிற சீருடை வழங்க உள்ளது. இந்த மாற்றம்  டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு போலீஸ்காரருக்கும் சீருடைக்காக 2250 ரூபாய்  வழங்கப்படுகிறது.


கடந்த 2008 ம் ஆண்டு மாயாவதி ஆட்சியில் இருந்த போது சீருடையை வெள்ளை நிறத்திலிருந்து நீல நிறத்திற்கு மாற்றினார். வெள்ளை நிறம் விரைவாக கறைபடிந்துவிடுவதால் மாற்றப்படுவதாக கூறினர். ஆனால் அதற்கு சமாஜ்வாடி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2012 ம் ஆண்டு அகிலேஷ் யாதவ் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் காக்கி நிறத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், போக்குவரத்து போலீசாரின் சீருடை மீண்டும் நீல நிறத்திற்கு மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News