செய்திகள்

தரம்சாலா மஞ்சுநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி வழிபாடு

Published On 2017-10-29 10:59 GMT   |   Update On 2017-10-29 10:59 GMT
கர்நாடக மாநிலம், தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள தரம்சாலா மஞ்சுநாதர் ஆலயத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் மங்களூரு மற்றும் பெங்களூருவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மங்களூரு வந்தார்.  

அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் கடலோரப் பகுதியான தட்சின கன்னடா மாவட்டத்தில் உள்ள தரம்சாலாவுக்கு வந்தார். இங்குள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் பாரம்பரிய மரியாதையுடன் அவரை வரவேற்ற தர்மகர்த்தா வீரேந்திர ஹெக்கடே ஆலய வளாகத்தை சுற்றி காட்டினார்.

பயபக்தியோடு மஞ்சுநாதரை வழிபட்ட பிரதமர் மோடி, அங்கு சிறிது நேரம் தியானம் செய்த பின்னர் இதர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக புறப்பட்டு சென்றார்.


பிரதமரின் வருகையையொட்டி தரம்சாலா நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆலய வளாகத்துக்குள் செல்வதற்கு முன்னர் தன்னை காண காத்திருந்த மக்களிடையே கையை அசைத்தபடி அவர்களது வரவேற்பை மோடி ஏற்று கொண்டார்.
Tags:    

Similar News