செய்திகள்

தாஜ்மஹால் இந்தியாவின் ஆபரணம்: உ.பி., மாநில கவர்னர் பெருமிதம்

Published On 2017-10-28 19:11 GMT   |   Update On 2017-10-28 19:11 GMT
உலகத்தின் பார்வையில் தாஜ்மஹால், இந்தியாவின் ஆபரணம் என உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம்நாயக் கூறியுள்ளார்.
ஜான்பூர்:

ஆக்ராவில் யமுனை நதிக்கரையில் எழிலுடன் வீற்றிருக்கும் உலக அதிசயம், தாஜ்மஹால்.

ஆனால் தாஜ்மஹாலைப் பற்றிய சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லை.

இந்த நிலையில் அங்கு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சமீபத்தில் சென்றார். தாஜ்மஹாலுக்குள் சென்று பார்வையிட்ட அவர், “தாஜ்மஹால் ஒரு மாணிக்கம். அது இந்திய கலாசாரத்தின் ஒருங்கிணைந்த பகுதி” என்று கூறினார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம்நாயக், ஜான்பூரில் ஒரு கருத்தரங்கை தொடங்கி வைக்க நேற்று சென்றிருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசுகையில், “உலகத்தின் பார்வையில் தாஜ்மஹால், இந்தியாவின் ஆபரணம். இதை பிரதமர் மோடியும், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் தெளிவுபடுத்தி உள்ளனர்” என்று குறிப்பிட்டார். 
Tags:    

Similar News