செய்திகள்

ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. அபராத தொகை தள்ளுபடி

Published On 2017-10-24 13:00 GMT   |   Update On 2017-10-24 13:00 GMT
ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்கு, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கான அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து, வரி செலுத்துவோர் ஒவ்வொரு மாதமும் ஜி.எஸ்.டி. வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்யாதவர்களுக்கு மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி.யில் நாள்தோறும் தலா 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்படும்.

ஆனால், ஜி.எஸ்.டி.யில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு முதல் மாதமான ஜூலை மட்டும், அபராதத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.



தற்போது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஜி.எஸ்.டி. வரி தாக்கல் செய்யாதவர்களுக்கும் அபராதத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

''ஜி.எஸ்.டி. கணக்கு தாமதமாக தாக்கல் செய்பவர்களுக்கான அபராதத் தொகை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, அபராத தொகையை செலுத்தியிருந்தால் அந்த தொகை அவர்களின் லெட்ஜரில் வரவு வைக்கப்படும்' என ஜெட்லி கூறியுள்ளார்.
Tags:    

Similar News