செய்திகள்

சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமனம்

Published On 2017-10-24 03:41 GMT   |   Update On 2017-10-24 03:41 GMT
சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்த ராகேஷ் அஸ்தானா, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக பணியாற்றி வந்த ராகேஷ் அஸ்தானா, சி.பி.ஐ. சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகியோர் அடங்கிய நியமனங்களுக்கான மந்திரிசபை குழு இதற்கான ஒப்புதலை அளித்தது.

ராகேஷ் அஸ்தானா, 1984-ம் ஆண்டு குஜராத் பிரிவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரி ஆனவர் ஆவார். விஜய் மல்லையா மீதான வங்கி மோசடி வழக்கு, ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு போன்றவற்றை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைவராக உள்ளார்.

இதற்கிடையே, ராகேஷ் அஸ்தானா மீது ஒரு ஊழல் வழக்கு இருப்பதால், அவருக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டாம் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அதை புறக்கணித்து நியமனம் செய்யப்பட்டதால், இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டா
Tags:    

Similar News