செய்திகள்

சுகேஷ் சந்திரசேகரை சுதந்திரமாக நடமாட விட்ட 7 டெல்லி போலீசார் பணி நீக்கம்

Published On 2017-10-24 02:57 GMT   |   Update On 2017-10-24 02:57 GMT
பெங்களூருவில் சுகேஷ் சந்திரசேகரை சுதந்திரமாக நடமாட விட்ட 7 டெல்லி போலீசார் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களில் ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகள் ஆகியோரும் அடங்குவர்.
புதுடெல்லி:

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமிஷனுக்கு டி.டி.வி.தினகரன் லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். இவர் கோர்ட்டு விசாரணைக்காக இந்த மாதம் மும்பை, கோவை, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு டெல்லி போலீசாரால் அழைத்து செல்லப்பட்டார். பெங்களூருவில் அவர் ஒரு வணிக வளாகத்தில் ஷாப்பிங் செய்யவும், வர்த்தக பேரத்தில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டதாக டெல்லி போலீஸ் கமிஷனரிடம் வருமான வரித்துறை அறிக்கை சமர்ப்பித்தது.



இதையடுத்து, டெல்லி போலீசார் 7 பேர், கடந்த 19-ந் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் அவர்கள் முறைகேடாக நடந்தது நிரூபணம் ஆகியுள்ளது.

இதனால், 7 பேரும் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர், 2 ஏட்டுகள் ஆகியோரும் அடங்குவர்.

Tags:    

Similar News