செய்திகள்

ராஜஸ்தான் அரசின் அவசர சட்டத்துக்கு ராகுல் காந்தி எதிர்ப்பு

Published On 2017-10-23 00:46 GMT   |   Update On 2017-10-23 00:46 GMT
குற்றச்சாட்டுக்கு உள்ளான நீதிபதிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசின் அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநில அரசு ஒரு அவசர சட்டம் இயற்றி உள்ளது. அதில், ‘உரிய அனுமதி இன்றி, நீதிபதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கக்கூடாது. அந்த அனுமதி கிடைக்கும்வரை, ஊடகங்களும் அதுபற்றி செய்தி வெளியிடக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.

இது, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை பாதுகாக்கும் வகையிலும், ஊடகங்களை ஒடுக்கும் வகையிலும் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்த அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், முதல்-மந்திரி வசுந்தரா ராஜேவை குறிப்பிட்டு, ‘மேடம் முதல்-மந்திரியே, நாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். இது 2017-ம் ஆண்டு, 1817-ம் ஆண்டு அல்ல’ என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News