செய்திகள்

புதிய ரெயில் பாதை தொடக்க விழா: பிரதமர் மோடி 29-ம் தேதி கர்நாடக மாநிலம் வருகை

Published On 2017-10-22 11:38 GMT   |   Update On 2017-10-22 11:39 GMT
பிடார் - கலாபுரகி இடையே 110 கிலோ மீட்டர் நீளத்தில் புதிய ரெயில் பாதை வழியாக போக்குவரத்தை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி வரும் 29-தேதி கர்நாடக மாநிலத்திற்கு வருகிறார்.
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் உள்ள பிடார் - கலாபுரகி இடையிலான 250 கிலோ மீட்டர் பயண தூரத்தை ஆந்திராவை சுற்றிச் செல்வதை குறைக்கும் வகையில் இரு நகரங்களுக்கு இடையில் குறுகிய தூரத்தில் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.

சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தில்  பிடார் - கலாபுரகி இடையில் பாதை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில் இந்த புதிய பாதையில் ரெயில் போக்குவரத்தை தொடங்கி வைப்பதற்காக வரும் 29-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்திற்கு வருகிறார்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 4 மணியளவில் பிடார் விமானப்படை தளத்தை வந்தடையும் மோடி, பிடார் நகரில் நடைபெறும் பா.ஜ.க.பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்.
Tags:    

Similar News