செய்திகள்

காஷ்மீர் ஆளுங்கட்சியில் இருந்து முன்னாள் மகாராஜாவின் பேரன் ராஜினாமா

Published On 2017-10-22 10:18 GMT   |   Update On 2017-10-22 10:18 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து முன்னாள் மகாராஜாவின் பேரனும் சட்டசபை மேல்சபை உறுப்பினருமான விக்ரமாதித்யா சிங் ராஜினாமா செய்துள்ளார்.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை முன்னர் ஆண்ட டோக்ரா வம்சாவளியின் கடைசி மன்னர் மகாராஜா ஹரி சிங். இவரது மகன் கரண் சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக முன்னர் இருந்தார். கரண் சிங்கின் மகனான விக்ரமாதித்யா சிங், மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த முப்தி முஹம்மது சயீத் தலைமையில் கடந்த 2015-ம் ஆண்டு அக்கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.

தற்போது அம்மாநில சட்டசபையில் மேல்சபை உறுப்பினராக பதவி வகிக்கும் விக்ரமாதித்யா சிங், மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து விலகி விட்டதாகவும் தனது ராஜினாமா கடிதத்தை முதல் மந்திரி மெஹ்பூபா முப்திக்கு அனுப்பியுள்ளதாகவும் இன்று தெரிவித்துள்ளார்.

மகாராஜா ஹரி சிங்
ரோஹிங்கியா அகதிகள் விவகாரம், மகாராஜா ஹரி சிங்கின் நூறாவது பிறந்தநாளுக்கு அரசு விடுமுறை ஆகிய தனது கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதால் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக விக்ரமாதித்யா சிங் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News