செய்திகள்

காஷ்மீர் எல்லைப்பகுதியில் இரண்டாவது நாளாக பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு

Published On 2017-10-22 08:39 GMT   |   Update On 2017-10-22 08:39 GMT
ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றன.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகின்றன.

போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியவகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சர்வதேச எல்லைகோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீதும், இந்திய எல்லையோர கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இங்குள்ள பாரமுல்லா மாவட்டத்திற்குட்பட்ட உரி எல்லைக்கோட்டுப் பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய படையினருக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்லும் ராணுவ போர்ட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். இரு பெண்கள் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக கமல்கோட் பகுதியில் இன்று காலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்து வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News