செய்திகள்

ஒடிசா: அனுமதி இல்லாத பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து - 8 பேர் பலி

Published On 2017-10-18 14:32 GMT   |   Update On 2017-10-18 14:32 GMT
ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் அனுமதி இல்லாத பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் அனுமதி இல்லாத பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்துகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.

பலசோர் மாவட்டத்தில் உள்ள குன்டச்சக்கா கிராமத்தில் கோலக் பிரதான் என்பவர் வீட்டில் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரித்து வந்ததாகவும், இன்று பிற்பகல் அங்கு ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பாபல்பூர் போலீசார் தெரிவித்தனர்.

பூரி மாவட்டற்குட்பட்ட பிப்லி பகுதியில் அனுமதி இல்லாமல் இயங்கிவந்த பட்டாசு தொழிற்சாலை விபத்தில் சிக்கி 6 வயது சிறுமி உயிரிழந்தாள். ரூர்கேலா நகர் பகுதியில் 40 பட்டாசு கடைகளில் நேற்றிரவு தீபிடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.  
Tags:    

Similar News