செய்திகள்

டெல்லி பல்கலைக்கழக ஆஸ்டலில் அதிரடி சோதனை - மாணவர்கள் அறையில் மாணவிகள் உல்லாசம்?

Published On 2017-10-18 09:12 GMT   |   Update On 2017-10-18 09:13 GMT
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் சமீபத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் மாணவர்கள் அறையில் மாணவிகள் உல்லாசமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் உள்ள பிரசித்திபெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ - மாணவியர் தங்குவதற்காக விடுதி வசதியும் உண்டு. இங்கு பயில்பவர்கள் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் உடலுறவில் ஈடுபடுவது சகஜமாகி விட்டதாகவும், பல்கலைக்கழக வளாகத்தில் தினந்தோறும் சுமார் 3 ஆயிரம் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் காணப்படுவதாகவும் கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், கடந்த 5-ம் தேதி விரிவுரையாளர் ஒருவர் தலைமையில் சுமார் 25 பாதுகாவலர்கள் இங்குள்ள மாணவ - மாணவியர் அறைகளில் அதிகாலை 5 மணியளவில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது மாணவர்களின் அறைகளில் மாணவிகள் உல்லாசமாக தங்கி இருந்தது தெரியவந்ததாக சில ஊடகங்களில் செய்திகளும் வெளியாகின.

இந்நிலையில், அதிகாலை வேளையில் சோதனை நடத்த வார்டன்கள் கதவைகூட தட்டாமல் உள்ளே நுழைந்து நாகரிகமற்ற வகையில் நடந்து கொண்டதாகவும், உறங்கி கொண்டிருந்த மாணவிகளின் அறைகளில் அலமாரி கதவை மூடாதது போன்ற சிறிய காரணங்களுக்காக உடனடி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க செயலாளர் சட்டருபா சக்கரபர்தி குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 5-ம் தேதி சோதனை நடத்தப்பட்டது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டுள்ள பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு விளக்கம் அளிக்க மறுத்து விட்டது.
Tags:    

Similar News