செய்திகள்

பண்டிகை காலத்தில் தாக்குதல் அபாயம்: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு எச்சரிக்கை

Published On 2017-10-17 22:40 GMT   |   Update On 2017-10-17 22:40 GMT
பயங்கரவாதிகளின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் விழா காலங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி:

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், வட மாநிலங்களில் தன்டேராஸ், பாய் துஜ் போன்ற பண்டிகைகளும் இந்த வாரம் கொண்டாடப்படுகின்றன. இதையொட்டி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய உத்தரவு ஒன்றை நேற்று பிறப்பித்தது.

அதில், ‘இந்த பண்டிகை காலத்தில், பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபடவும், சீர்குலைவு சக்திகள் வகுப்பு கலவரத்தை தூண்டி விடவும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதை முறியடிக்க அனைத்து மாநில அரசுகளும் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

சந்தைகள், பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் போன்று மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் அதிகமான போலீசாரை நிறுத்த வேண்டும். வழிபாட்டு தலங்கள் அருகே ஆத்திரமூட்டும் கோஷங்களை யாரும் எழுப்பாதவாறு உஷாராக இருக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், பயங்கரவாதிகள் தாக்குதல் குறித்து எந்த திட்டவட்டமான தகவலும் இல்லை என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News