செய்திகள்

ஐதராபாத்தில் தேசிய அறிவியல் மாநாடு: நோபல் பரிசு பெற்ற 30 பேர் பங்கேற்க உள்ளனர்

Published On 2017-10-17 07:46 GMT   |   Update On 2017-10-17 07:46 GMT
ஜனவரி மாதம் நடைபெற உள்ள தேசிய அறிவியல் மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற 30 பேர் பங்கேற்பார்கள் என தெலுங்கானா வனத்துறை மந்திரி ஜோகு ராமண்ணா கூறினார்.
ஐதராபாத்:

ஐதராபாத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 105-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெற உள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளை உறுப்பினர்களாக கொண்ட இந்த அறிவியல் காங்கிரஸ் சங்கத்தின் ஆண்டு மாநாடு ஜனவரி 3-ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடக்கிறது.

தேசிய வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் பங்கு என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இம்மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற பல நாடுகளைச் சென்ற சுமார் 30 பேர் கலந்து கொள்வார்கள் என தெலுங்கானா வனத்துறை மந்திரி ஜோகு ராமண்ணா தெரிவித்தார். இந்த முறை மாநாடு உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

மேலும், மாநிலத்தில் பல இடங்களில் 9 அறிவியல் மையங்கள் 166 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. வாரங்கல் மற்றும் கரீம்நகரில் கதிர்வீச்சு தொழில்நுட்ப ஆலைகளை நிறுவ உள்ளதாகவும் ஜோகு தெரிவித்தார்.
Tags:    

Similar News