செய்திகள்

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் வகையில் தீபாவளியை கொண்டாட உ.பி. அரசு திட்டம்

Published On 2017-10-16 19:55 GMT   |   Update On 2017-10-16 19:55 GMT
இந்தாண்டு தீபாவளியை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்யும் வகையில் புதிய விதமாக கொண்டாட யோகி ஆதித்யாநாத் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

இந்த ஆண்டு தீபாவளியை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற செய்யும் வகையில் புதிய விதமாக கொண்டாட யோகி ஆதித்யாநாத் தலைமையிலான உத்திரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மிகவும் பெரிய அளவில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார்.

உத்திரப்பிரதேச முதல்வராக யோகி ஆதித்யாநாத் பொறுப்பேற்ற பின் வரப்போகும் முதல் தீபாவளியாகும் இது. இந்த முதல் தீபாவளியை இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகவும் வித்தியாசமாக பெரிய அளவில் கொண்டாட யோகி ஆதித்யாநாத் முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து இந்த முதல் தீபாவளியை அவர் எப்படியாவது கின்னஸ் புத்தகத்தில் வர வைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து 4 லட்சம் தொண்டர்களை இந்த தீபாவளி விழாவில் கலந்து கொள்ளும் படி கூறியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் ஒரே நேரத்தில் 2 லட்சம் பேரை ஒரு பெரிய மைதானம் முழுக்க விளக்கு ஏற்ற வைக்கும் திட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.

இந்த கொண்டாட்டத்திற்காக அயோத்யா மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 10 ஆயிரம் கோவில்களை தயார்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான 90 சதவிகித வேலைகள் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தீபாவளியில் உத்திரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில் நடக்கும் மொத்த நிகழ்வும் கண்டிப்பாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் என்று அவரது தொண்டர்கள்
கூறியுள்ளனர்.

இந்த கின்னஸ் திட்டம் குறித்து பேசிய யோகி ஆதித்யாநாத் ''இது நான் முதல்வர் ஆன பின்னர் நடக்கும் முதல் தீபாவளி கொண்டாட்டம். அதற்காகவே இந்த நிகழ்வை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளேன். இதே போல் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டப்படும் போதும் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் நடக்கும்'' என்று கூறினார்.
Tags:    

Similar News