செய்திகள்

புதிய கட்சி தொடங்க மாட்டேன்: முலாயம்சிங் யாதவ்

Published On 2017-09-25 08:31 GMT   |   Update On 2017-09-25 08:34 GMT
தற்போதைய சூழ்நிலையில் நான் எந்த புதிய கட்சியையும் தொடங்க மாட்டேன் என்று முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோ:

உத்தரபிரதேச முன்னாள் முதல்மந்திரி முலாயம்சிங் சமாஜ்வாடி கட்சி உறுப்பினரான அவருக்கும் அவரது மகன் அகிலேஷ் யாதவுக்கும் இடையே மோதல் உருவானது. இதனால் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தோல்வியை தழுவியது.

அகிலேஷ் யாதவ் கட்சியை கையகப்படுத்தியதால் முலாயம்சிங் யாதவ் அதிருப்தியில் இருந்தார்.

இதற்கிடையே சமாஜ்வாடி கட்சியின் 25-வது ஆண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட மாநாட்டுக்கு அவரை அழைக்கவில்லை. இதனால் மிகவும் நொந்து போய் இருந்த முலாயம்சிங் யாதவ் புதிய கட்சி தொடங்க போவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

புதிய கட்சி குறித்து அறிவிப்பை அவர் இன்று வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் புதிய கட்சி தொடங்கமாட்டேன் என்று முலாயம்சிங் யாதவ் அறிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போதைய சூழ்நிலையில் நான் எந்த புதிய கட்சியையும் தொடங்கவில்லை. அகிலேஷ் யாதவ் எடுக்கும் எந்த முடிவுக்கும் எனக்கும் உடன்பாடு இல்லை. அதனால்தான் கட்சியின் செயல்பாடுகளில் இருந்து விலகி இருக்கிறேன்.

எத்தனை காலம் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கும் என்று வேறு யாராலும் சொல்ல முடியாது. மகன் என்ற முறையில் அவருக்கு எனது ஆசீர்வாதம் இருக்கும்.

இவ்வாறு முலாயம்சிங் யாதவ் கூறினார்.
Tags:    

Similar News