செய்திகள்

அரவிந்த் சுப்ரமணியத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு

Published On 2017-09-23 10:18 GMT   |   Update On 2017-09-23 10:18 GMT
இந்திய தலைமை பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

புதுடெல்லி: 

இந்திய தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வகித்துவந்த தலைமை பொருளாதார ஆலோசகர் பதவி காலியானது.

அதைத்தொடர்ந்து கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி அரவிந்த் சுப்ரமணியன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். இவர் அலகாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும், ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்திலும் கல்வி பயின்றுள்ளார். வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கையின் முதன்மை எழுத்தாளரான, அவரது பதவிக்காலம் வருகிற அக்டோபர் 16ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், அரவிந்த் சுப்ரமணியத்தின் பதவிக்காலத்தை மேலும் ஒரு ஆண்டிற்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதையடுத்து அடுத்த ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். 
Tags:    

Similar News