செய்திகள்

பெங்களூரில் கடத்தப்பட்ட வருமானத்துறை அதிகாரி மகன் கொலை - 4 பேர் கைது

Published On 2017-09-22 11:06 GMT   |   Update On 2017-09-22 11:06 GMT
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வருமான வரித்துறை அதிகாரி மகன் பணத்திற்காக கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர்:

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வருமானத்துறை அதிகாரியாக பணியாற்றி வருபவர் நிரஞ்சன் குமார். அவரின் மகன் சரத் குமார்(19) பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தான். கடந்த 12-ம் தேதி புதிதாக வாங்கிய காரை தனது நண்பர்களிடம் காட்டுவதற்காக சரத்குமார் வெளியே சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், இரவு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை.

இரண்டு நாள்களுக்கு பின்னர் சரத் தன்னை கடத்தி விட்டதாக வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தன்னை விடுவிக்க 50 லட்சம் பணம் கேட்கிறார்கள். தயவு செய்து கொடுத்து காப்பாற்றுங்கள் என தனது தந்தையிடம் கூறினார்.

இதையடுத்து சரத்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால் மாணவன் காணாமல் போன 10 நாட்களுக்கு பிறகு இன்று அவனது உடல் அருகில் உள்ள ஏரிப்பகுதியில்  கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சரத் கொலை சம்பவம் தொடர்பாக அவரது நண்பன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

Similar News