செய்திகள்

லஞ்சப் புகார்: எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு 2 விவசாயிகள் தீயிட்டு தற்கொலை முயற்சி

Published On 2017-09-04 07:49 GMT   |   Update On 2017-09-04 07:49 GMT
தெலுங்கானா மாநிலத்தில் லஞ்சம் கேட்டதாக கூறி எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு இரண்டு இளம் விவசாயிகள் தீயிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரிம் நகர் பகுதியை சேர்ந்த இரண்டு இளம் விவசாயிகள் கிராம வருவாய் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அதிகாரிகளிடம் தலித்கள் மற்றும் பின் தங்கியர்களும் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின் கீழ் நிலம் கேட்டுள்ளார். 

அப்போது நிலம் வழங்க அதிகாரி ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கிராம வருவாய் அதிகாரி லஞ்சம் கேட்டது தொடர்பாக புகார் அளிக்க ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ. ராசமயி பாலகிருஷ்ணன் அலுவலகத்திற்கு இருவரும் சிலருடன் சென்றனர். 

ஆனால் அங்கு நீண்ட நேரம் அவர்களை அழைத்து பேசவே இல்லை. காலை 10 மணிக்கு சென்ற அவர்கள் மாலை 3.30 மணி வரை எம்.எல்.ஏ. அலுவலத்திற்கு வெளியே காத்திருந்தனர். பிறகு அவர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு வற்புறுத்தப்பட்டனர். 

இதனால் அதிருப்தி அடைந்த அந்த விவசாயிகள் இருவர் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். இதனை கண்டதும் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெலுங்கான நிதித்துறை அமைச்சர் எடெலா ராஜேந்தர் தெரிவித்தார்.
Tags:    

Similar News